Skip to main content

Posts

Showing posts from June, 2012

தொண்டைமான்

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந் தருள்வன் னியரை யாம்புகழ்ச் செவிக்கா ரமுதமெனக் கேட்டுச் சிந்தையுவந்து சீர்தூக்கிப் புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப் பொற்றண் டிகபூடணத்தோடு கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான் கருணாகரத்தொண்டை வன்னியனே. 68 ----------சிலைஎழுபது கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவநாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி. 1070-1118)கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர்பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும்ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாகஅறியப்படுகிறது. சிலையெழுபது எனும் நூல் மூவேந்தர் ஆட்சிக்குப் பின் தோன்றிய நூல்அல்ல. சிலை எழுபது கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.சோழர்ஆட்சியின்போது எழுதப்பெற்றது இந்நூல்.இந்நூல் வன்னியர் குலத்தினராகக்குறிப்பிடுவது பள்ளி இனத்தவரையே. இந் நூலில் வன்னியர் பள்ளி நாட்டார், வீர பண்ணாடர் என்றும் தழலிடை அவதரித்தோர் என்றும்குறிப்பிடப்படுகின்றனர்.மேலும் சம்பு முனிவர் யாகத்தில் தோன்றியவர்வன்னியர் என்றும் கூறப்பட்டுள்ளது.